அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றமற்ற விசாக்களில் (Non-immigrant visas) பணிபுரிபவர்கள், வேலை இழந்த பிறகு சட்டப்பூர்வமாகத் தங்குவதற்காக வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச 60 நாள் அவகாசத்தை (Grace Period) முற்றிலுமாக நீக்குவதற்கான புதிய விதிமாற்றத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS-Department of Homeland Security) தீவிரமாக முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக எச்-1பி (H-1B) விசாவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நடைமுறை என்ன? தற்போது H-1B, L-1, O-1 உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைவாய்ப்பு விசாக்களை வைத்துள்ளவர்கள் திடீரென வேலை இழந்தால், அதிகபட்சம் 60 நாள்கள் அல்லது விசா அனுமதிக் காலம் முடியும் நாள், இவற்றில் எது முந்துகிறதோ அதுவரை, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கான அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்திற்குள் புதிய வேலை வழங்குநரைத் (Employer) தேடுவது, விசா நிலையை (Visa Status) மாற்றுவது அல்லது நாட்டைவிட்டு வெளியேறுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகையின் பரிசீலனை இந்த 60 நாள் அவகாசத்தை முழுமையாக ரத்து செய்யும் விதமாக, “Eliminating the Discretionary 60-day Grace Period” என்ற முன்மொழிவைத் திட்டத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் (DHS), குடியுரிமை மற்றும் குடியேற்றப் பிரிவும் (USCIS) இணைந்து தயாரித்துள்ளன. இந்த முன்மொழிவு மீதான சட்டப்பூர்வ மதிப்பீடுகளை வெள்ளை மாளிகையின் ஒழுங்குமுறை விவகார அலுவலகம் (OIRA - Office of Information and Regulatory Affairs) தற்போது நிறைவு செய்துள்ளது. இருப்பினும், இது இப்போதைக்கு அமலுக்கு வந்த இறுதி விதி அல்ல; பொதுமக்களின் கருத்துக்கேட்பு உள்ளிட்ட அடுத்தடுத்த விதிமுறை நடைமுறைகள் இன்னும் பாக்கியுள்ளன. இந்தியர்கள் மீது என்ன தாக்கம்? அமெரிக்காவின் திறமையான பணியாளர் பிரிவில் (Skilled workforce) H-1B விசா மூலம் பணிபுரிபவர்களில் இந்தியர்களின் பங்கு மிக அதிகம். திடீரென வேலையை இழக்கும் ஒருவருக்கு, புதிய வேலை தேடவும் தனது விசா பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த 60 நாள்கள் ஒரு முக்கியமான பாதுகாப்பு அரணாக (Buffer) விளங்கி வருகிறது. ஹெச்-1பி விசா இந்த அவகாசம் முற்றிலுமாக நீக்கப்பட்டால், வேலை இழந்த உடனேயே குடியேற்ற நிலை தொடர்பான கடும் மன அழுத்தம் பணியாளர்களுக்கு ஏற்படும். புதிய வேலை வழங்குநர், குடும்பம், குழந்தைகளின் கல்வி, வீட்டு வசதி போன்ற வாழ்வாதாரம் சார்ந்த மிக முக்கிய முடிவுகளை எந்தவித அவகாசமும் இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். அடுத்தகட்ட நிலை என்ன? தற்போதைக்குப் பழையபடி 60 நாள் அவகாச முறை நடைமுறையில்தான் உள்ளது. இருப்பினும், இந்த முன்மொழிவு எதிர்வரும் காலங்களில் இறுதி விதியாக உருவெடுத்தால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய நிபுணர்களின் வேலை மற்றும் விசா பாதுகாப்பில் இது மிகப்பெரிய சவால்களை உருவாக்கக்கூடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/h-1b-workers-to-lose-grace-period-in-white-house-approved-plan



