கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி செயல்பட்டு வருகிறார். இவர் இன்று மதினிப்பூர் மாவட்டம் கேஷ்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஹிதிராம் போசின் நினைவிடத்தில் அஞ்சலி, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். ஹெலிகாப்டர் தரையிறக்கம் தும்தும் நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேஷ்பூர் நகருக்கு அவர் புறப்பட்டார். ஹெலிகாப்டர் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் வானிலை மோசமடைந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டரை விமானி கொல்ஹட் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி உள்பட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, நிகழ்ச்சி நடைபெற உள்ள கேஷ்பூருக்கு முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி காரில் புறப்பட்டு சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/west-bengal-chief-minister-helicopter-makes-emergency-landing




