திருவனந்தபுரம், கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்ட வழக்கில், கேரள முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவருடைய மகள் வீணா, வீணாவின் கணவர் முகமது ரியாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கேரள டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில், போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கு பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆலப்புழையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அவர் பேசியதாவது:- என் மகள் வீணாவின் திருமணத்துக்கு முன்பே, அவரது எக்சா லஜிக் நிறுவனத்துக்கும், கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. எக்சாலஜிக் அளித்த சேவைக்கான ஊதியமாக பணம் தரப்பட்டது. அதற்கு தேவையான வரி செலுத்தப்பட்டுள்ளது. எல்லாம் சட்டப்படி நடந்துள்ளது. இப்போது, பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்து, இடதுசாரி கூட்டணி மீது குறி வைத்துள்ளது. நான் விசாரணையை நினைத்து பயப்படவில்லை. இதற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜனதாவும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/congress-has-joined-hands-with-the-bjp-pinarayi-vijayan-alleges




