சென்னை, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரஷ்ய நாட்டுப் பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். காதல் டூ கல்யாணம் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் உதயசங்கர். அவர் சீனாவில் உள்ள ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றி வரும் அதே நிறுவனத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணும் பணியாற்றி வந்தார். இதையடுத்து அவர்கள் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டினர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணம் இதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இவர்களது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தமிழ் கலாச்சார முறைப்படி, மணமகள் பட்டுப்புடவை உடுத்தியும், மணமகன் பட்டு வேட்டி-சட்டை அணிந்து பாரம்பரிய உடைகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வந்தனர். அங்கு இருவீட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க, கெட்டிமேள சத்தத்துடன் உதயசங்கர், ரஷ்யப் பெண்ணிற்கு தாலி கட்டினார். மேலும் மணப்பெண் மரியா தனது பெயரை கீர்த்தனா என்றும் மாற்றிக்கொண்டார். சர்வதேச எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தை மதித்து திருச்செந்தூர் முருகன் சாட்சியாக நடந்துள்ள இந்த காதல் திருமணத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/love-blossoms-across-borders-mylapore-man-marries-woman-from-abroad



