பிஷ்கெக், பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் ஷாவ்கெட் மிர்ஸியோயேவை சந்தித்து இரு தரப்பு உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ஒலிய தராஜலி தோ'ஸ்த்லிக்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ் வழங்கினார். உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்த பிறகு, பிரதமர் மோடி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கிர்கிஸ்தான் சென்றடைந்தார். அந்நாட்டின் அதிபர் சதிர்ஜாபரோவ் அழைப்பின்பேரில், 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, பிஷ்கெக் நகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/prime-minister-modi-pays-tribute-to-the-mahatma-gandhi-statue-in-kyrgyzstan




