சென்னை, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதற்கட்டமாக 3,000 கன அடி நீரை முதல் அமைச்சர் விஜய் கடந்த 1-ம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து அன்றைய தினம் மாலை நான்கு மணி அளவில் 4 ஆயிரம் கன அடியாகயும், இரவு 8 மணிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த ஐந்து நாள்களாக காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியாக இருந்தது. இதற்கிடையில், இன்று மாலை 6 மணியளவில் 10,000 கனஅடியாக அதிகரிப்பட்டது. அணையின் நீர் மட்டம் தற்போது 92.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.35 டிஎம்சியாக உள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்பட்ட 10,000 கன அடி நீரை, நாளை காலை 6 மணிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்க உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 8,075 கன அடியிலிருந்து 8,612 கன அடியாக அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-made-to-release-12000-cubic-feet-of-water-per-second-from-mettur-dam




