Fuld artikel
மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா(5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டுக்கு குழந்தைகள் வருவது வழக்கம். சிறுமி சாய் தீப்தி மொஹரம் மற்றும் வார விடுமுறையினைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரண்டு குழந்தைகளுடன் செல்வி, தனது தந்தை முத்துமுருகன் வீட்டுக்கு இரவு 10 மணிக்கு வந்துள்ளார். வீட்டில் இரவு குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்த நிலையில் வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு தூங்கி உள்ளனர். பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன் - புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி? அதிகாலையில், பார்த்தபோது ஒரு குழந்தையான சாய் தீப்தியைக் காணவில்லை. இதையடுத்து செல்வியும் அவரது தந்தையும் மாயமான குழந்தையை அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அக்கம் பக்கம் தேடி நிலையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடினர். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இறந்த நிலையில் குழந்தை சாய் தீப்தியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழப்பு இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே சிறுமி எவ்வாறு உயிரிந்தார் என்பது தெரியவரும் என்று தெரிவித்தனர். சென்னை: அதிகாலையில் இளம்பெண் கொடூரக் கொலை; மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு தப்பிய நபர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




