லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் சார்ரா நகரியத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாள். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதையடுத்து, போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். உள்ளூர் நபர்களின் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபோது, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அச்சிறுமி சுயநினைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அருகே மதுபோதையில் உலவிக்கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிறுமி மீது ரசாயனத்தை தெளித்து மயக்கமடைய செய்து, கூட்டு பாலியல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், இருவரும் 'போக்சோ' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/gang-rape-of-a-14-year-old-girl-in-uttar-pradesh




