சென்னை, சென்னை ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் பிரியா ராஜன், தவெக அரசும் மீது முதல்-அமைச்சர் விஜய் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் விஜய் பேச்சுக்கு சட்டமன்றம் தலைகுனிந்த நிலையில் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சட்டசபையில் சம்பந்தமில்லாததை முதல்-அமைச்சர் பேசி திசை திருப்புகிறார். தவெக அரசு பதவி ஏற்ற 4 மாதங்களில் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுபற்றி அமைச்சர்களிடம் கேள்வி கேட்டால் காற்று அடிக்கவில்லை, மழை பெய்யவில்லை என்று பதிலளிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கு ஐடி பூங்காக்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதுபோல நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என நம்பியிருந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டுள்ளனர். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால், இருப்பதும் போய்விடும். சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுபோல் எண்ணற்ற நடவடிக்கைகளை தமிழகத்திற்கு எதிராக தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது எந்த விதத்தில் நியாயம்? முடிந்த திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தவெக அரசு கொண்டு வர வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்தில் இருந்தாலும் கொள்கையில் உறுதியாக நிற்கும். தொடர்ந்து போராடி தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளனர். திமுகவின் தேவை தமிழகத்திற்கு எப்போதும் தேவை. என்றார். தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து தனியார் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதை சுட்டிக்காட்டி மேயர் பிரியா பேசுகையில், “தலைவர் என்றால் என்னவென்றே தெரியாமல், கொள்கையை உணராமல், வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு பிரச்சினைகள் வரும்போது எதிரணியின் மீது பழி போடுவது ஒரு தலைமைப் பண்புக்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/lacks-the-qualifications-for-leadership-mayor-priya-remarks-citing-actor-vijay-sethupathis-statement




