சென்னை, தமிழகத்தில் பல எம்.எல்.ஏ.க்களுக்கு கார், உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்று சட்டசபையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசினார். அதைத்தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கப்படும் என்று அவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். ஆனால் அரசு ஏற்கனவே நிதிநிலை நெருக்கடியில் இருப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 59 பேருக்கும் அரசு கார் தேவையில்லை என்று அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி னார். அதைத்தொடர்ந்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன் வழங் கியுள்ளார். அரசு கார்கள் வேண்டாம் என்ற அந்தக் கடிதத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து அந்த கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களான ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-government-cars-dmk-writes-to-assembly-secretariat




