சென்னை, தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டபேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்தார். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். இதன்படி 1.நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். 2.மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையே, அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போது உள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும். 3.வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. பா.ம.க. எதிர்ப்பு இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாமக எம்.எல்.ஏ., கணேஷ் குமார் சட்டசபையில் பேசுகையில், “ஒன்றிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருமா? வராதா? என்ற சூழ்நிலையில், செவிவழி செய்தியை வைத்துக் கொண்டு இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன? முதல்-அமைச்சர் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும். மகளிர் உரிமை அதிகாரத்திற்கு எதிராக பா.ம.க. ஒருபோதும் நிற்காது” என்று அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-must-be-withdrawn-pmk-insists




