Vollständiger Artikel
சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் நடந்து முடிந்திருக்கிறது. இன்று நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே. சபரீசன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவையில் உரையாற்றியிருந்தார். அவர் பேசுவதைப் பார்க்க திமுக மேலிடத்தின் 'மாப்பிள்ளை சபரீசன்' வந்திருந்தார். ஓ.எஸ்.மணியனும் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருக்கும் போதே சபரீசன் வந்துவிட்டார். அதனால் சில நிமிடங்கள் எதிர்க்கட்சித் தலைவரின் அறையில் காத்திருந்தார். உதயநிதி பேசத் தொடங்குகையில் பார்வையாளர் மாடத்திற்குச் சென்றவர், அங்கிருந்து அவை நிகழ்வுகளைப் பார்வையிட்டார். உதயநிதி பேசி முடிக்கையிலேயே வேக வேகமாகக் கிளம்பியும் சென்றுவிட்டார். சபரீசனின் திடீர் சட்டசபை என்ட்ரி மூலம் திமுக தலைமை அதன் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சில மெசேஜ்களைக் கொடுக்க நினைப்பதாகக் கூறுகின்றனர் அரசியல் வட்டாரத்தினர். பிறந்தநாள் கேக் இன்று முதல்வர் விஜய்யின் பிறந்தநாள். தமிழகம் முழுவதும் தவெகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரமாண்டமாக விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தனர். சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கையில் நிர்வாகிகள் சிலர் முதல்வருக்காக ஒரு பெரிய கேக்கை தலைமைச் செயலகத்துக்கு எடுத்து வந்திருந்தனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய கடன் - விஜய் அரசு என்ன செய்ய வேண்டும்? | Long Read அதிகாரிகள் முதல்வரின் தனிப்பிரிவில் அந்தக் கேக்கை வாங்கி வைத்தனர். ஆனால், முதல்வர் தரப்பு கேக் வெட்டும் ஐடியா இல்லை. மேலும் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டினால் சரியாகவும் இருக்காது எனக் கூறிவிட்டதால், அந்தக் கேக்கை அப்படியே மீண்டும் எடுத்துச் சென்றுவிட்டனர். முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சட்டமன்ற அவை ஊழியர்களுக்கும் தலைமைச் செயலகத்தில் கூடியிருந்த தவெக நிர்வாகிகளுக்கும் ஸ்வீட் பாக்ஸ்கள் விநியோகிக்கப்பட்டது. ஊழியர்கள் ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கிவிட்டு முதல்வருக்கு அதிகாரிகளிடம் வாழ்த்துகளையும் கூறிவிட்டு சென்றனர். பல்லவி திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ பல்லவிக்குச் சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருந்தது. முதல்வர்தான் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென பல்லவி கூறியிருந்தார். முதல்வரின் பிறந்தநாளான இன்றே அந்த வாய்ப்பும் வந்தது. சட்டமன்றம் முடிந்த பிறகு பல்லவியைக் காத்திருக்க சொன்ன அதிகாரிகள் முதல்வர் ஃப்ரீ ஆனவுடன் அழைத்தனர். பல்லவி ஏற்கனவே தமிழ் வெற்றிக்கொண்டான் என்ற பெயரைத் தேர்வு செய்து வைத்திருந்தார். அதை முதல்வரிடம் சொல்ல, முதல்வரும் குழந்தையின் காதில் மூன்று முறை பெயரைச் சொல்லி வாழ்த்து கூறி அனுப்பி வைத்திருந்தார். மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சில கூறுகளை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்யும் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி அவையிலிருந்து வெளியேறினார். எடப்பாடி வெளியேறிய போதும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சங்கராபுரம் ராகேஷ் போன்றோர் அவையிலேயே இருந்தனர். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை? முதல்வர் விஜய், வாய் திறக்காமல் இருக்கிறார் என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மக்கள் கருத்து? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



