நடிகர் ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கராத்தே பாபு’ படக்குழு திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரவி மோகன் இப்போது விதவிதமான ஜானர்களில் நடித்து வருகிறார். பேன்டஸியா ‘ஜீனி’, அரசியல் ஜானராக ‘கராத்தே பாபு’, ‘மிருதன் 2’, கலகலப்பான ‘ப்ரோ கோட்’ என அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார். ரவி மோகனின் 34-வது படம் ரவி மோகனின் 34-வது படமான ‘கராத்தே பாபு’ படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இயக்குனர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், நடிகர் ரவி மோகனின் அரசியல்வாதி கதாபாத்திரம் பெரும் பேசுபொருளானது. இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ் ஜிவால், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ராசாதி ராசா’ பாடல் வெளியானது ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் ‘ராசாதி ராசா’ பாடல் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பாடகி மீனாட்சி இளையராஜா எழுதி பாடியுள்ளார். இந்த நிலையில் ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தலைவன் பிறந்தநாள் இன்று! எங்களின் மாண்புமிகு தலைவர் உயர்திரு சண்முக பாபு அவர்களுக்கு கராத்தே பாபு குழுவின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! மக்களின் பேராதரவுடன் தலைவன் விரைவில் வருகிறார்…! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-ravi-mohans-birthday-the-karathey-babu-team-wishes-him-with-a-special-poster




