கரூர், காதல் திருமணம் செய்த மனைவியை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து, பின்னர் கைவிட்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காதல் திருமணம் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கார்த்திக் என்பவரை கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சுமார் ஓராண்டாக குடும்பம் நடத்தி வந்தனர். கருகலைப்பு இதையடுத்து, இளம்பெண் கர்ப்பமானதாகவும், அப்போது கணவர் கார்த்திக்கின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பெற்றோரின் பேச்சைக் கேட்டு கணவர், தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், அதன்பின்னர் தன்னை தனியாக விட்டுவிட்டு பிரிந்து சென்றதாகவும் இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். கோரிக்கை இது தொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தனது கணவர் கார்த்திக் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-abandons-his-loving-wife-by-forcing-her-to-have-an-abortion-young-woman-makes-sensational-complaint




