இஸ்லாமாபாத், பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மலையேற்ற வீரர் 'நிம்ஸ் டாய்' என்றும் அழைக்கப்படும் நேபாளத்தை சேர்ந்த புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா, 2019ஆம் ஆண்டில் உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் 189 நாள்களில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார். இவரது மலையேற்ற சாதனைகள் நெட்பிளிக்ஸில் "14 Peaks: Nothing is Impossible" என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது. பிராட் பீக் இந்தநிலையில், நிர்மல் புர்ஜா தலைமையிலான மலையேற்ற குழு, வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான 'பிராட் பீக்' சிகரத்தில் ஜூலை 30 அன்று ஏறத் தொடங்கினர். இந்த மலைச்சிகரங்களில் ஏற உலகில் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் வந்து செல்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து 8,047 மீட்டர் உயரத்தில் 'பிராட் பீக்' மலைச்சிகரம் அமைந்துள்ளது. இது உலகின் 12 ஆவது மிக உயரமான மலைச்சிகரமாகும். அங்கு அவ்வப்போது பலத்த மழையும் கடும் பனிப்பொழிவும் ஏற்படும். பயங்கர பனிச்சரிவு இந்தநிலையில், இங்கு நேற்று (ஜூலை 30) ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து 'ஆல்பைன் கிளப் ஆப் பாகிஸ்தான்' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'நிம்ஸ் டாய்' தலைமையில் சென்ற 10 பேர் அடங்கிய சர்வதேச மலையேற்ற குழு ஒன்று பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும், அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாயமானவர்களில் 6 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், 1 பாகிஸ்தானியர், 1 ஓமானி, 1 அமெரிக்கர் மற்றும் 1 நபர் சீனவை சேர்ந்தவர் என்று தகவல் வெளியானது. உடல்களை தேடும் பணி தீவிரம் இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்த நிலையில், நிர்மல் புர்ஜா பலியானதாக அவரது 'எலைட் எக்ஸ்பெட்' நிறுவனம் தெரிவித்துள்ளது. நிர்மல் புர்ஜா உடல் உள்பட 6 பேரின் உடல்கள் மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. நிர்மல் புர்ஜா உயிரிழந்தது சர்வதேச மலையேற்ற வீரர்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல்வேறு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த அவர் என்றும் நினைவுக்கூரப்படுவார் என அவரைப் பின் தொடர்வோர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். யார் இந்த நிர்மல் புர்ஜா? நேபாளத்தில் பிறந்த நிர்மல் புர்ஜா, பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகு சேவையிலும் (SBS) பணியாற்றியவர். 2019இல் உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் வெறும் 6 மாதங்களில் ஏறி உலக சாதனை படைத்தார். இவருடைய இந்த சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/top-mountaineer-nirmal-purja-confirmed-dead-after-11-hit-by-avalanche-in-pakistan




