திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 13 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் திருவண்ணாமலை மாவட்டம், தேவரெட்டியார் குப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வீரமணி (வயது 45). இவர் கடந்த 2021-ம் ஆண்டு 13 வயதுடைய வாய் பேச முடியாத, மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளி வீரமணிக்கு சாகும்வரை சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-who-raped-a-minor-girl-sentenced-to-life-imprisonment




