விழுப்புரம், விழுப்புரம் அருகே உள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை முதுகலை ஆய்வு மாணவர்கள் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் அரச மரத்தடியில் ஒரு பெண் சிற்பத்தை கண்டெடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இந்த சிற்பம், சமணம் சார்ந்த காவல் தெய்வமான தர்மதேவி என தெரியவந்தது. இவரை அம்பிகா, அம்பை, அம்பா, குஷ்மாந்தினி மற்றும் அம்ர குஷ்மாந்தினி என பல பெயர்களை வைத்து சமணர்கள் வழிபடுகின்றனர். இந்த தர்மதேவி சிற்பத்தின் உயரம் 3 அடியாகும். தர்மதேவி சுகாசன நிலையில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். அவரின் தலையில் அழகான மகுடம் காட்டப்பட்டுள்ளது. மகுடத்தின் முகப்பில் அமர்ந்த நிலையில் நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் காட்டப்பட்டுள்ளது. தேவியின் இரு காதுகளிலும் காதணிகளும், கழுத்தில் முத்துமாலையும், சரப்பளியும் உள்ளது. மேலும் அன்னையின் இடுப்பில் மேகலை காட்டப்பட்டுள்ளது. கால்களில் தண்டைகள், சிலம்புகள் காணப்படுகின்றன. வலது காலுக்கு கீழ் தர்மதேவியின் வாகனமான சிங்கம் உள்ளது. அவரது இரு குழந்தைகளும் பணிப்பெண்ணும் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பத்தின்காலம் கி.பி 13-14-ம் நூற்றாண்டாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/discovery-of-a-statue-of-dharmadevi-a-guardian-deity-from-the-jain-era




