சென்னை, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- துணை ஆணையாளர் ஆய்வு பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் இன்று (14.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148க்குட்பட்ட விருகம்பாக்கம் கால்வாயின் தொடக்க இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், வார்டு-149க்குட்பட்ட மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வார்டு-151க்குட்பட்ட ஆற்காடு சாலை, போரூர் சந்திப்புப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டி பணிகளைப் பார்வையிட்டு, தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் தொடர்ந்து, வார்டு-152க்குட்பட்ட தேவி குப்பம் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைக் கட்டடப் பணியினைப் பார்வையிட்டு, விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், வார்டு-149க்குட்பட்ட சம்பத் நகரில் உள்ள அம்மா உணவகத்தினைப் பார்வையிட்டு, உணவுப் பொருட்களின் இருப்பு, சமையலைறையினை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ச்சியாக, வார்டு-149ல் உள்ள இலவச ஒப்பனை அறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/pre-monsoon-preparedness-works-in-valasaravakkam-south-zone-deputy-commissioner-inspects




