மாஸ்கோ, உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் முயற்சி எடுத்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விக்ட்ஆப் மற்றும் ஜெரட் குஷ்னர் ரஷியா சென்றுள்ளனர். இவர்கள் நாளை உக்ரைன் செல்ல உள்ளனர். தாக்குதல் நிறுத்தம் இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை 3 நாட்கள் நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. முன்னதாக ரஷியா மீது 3 நாட்கள் தாக்குதலை நிறுத்துவதாக உக்ரைன் அறிவித்திருந்தது. மேலும், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை கருத்தில் கொண்டு ரஷியாவும் தாக்குதலை நிறுத்த வேண்டுமென உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து கீவ் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/russia-announces-temporary-halt-on-attacks-on-ukrainian-capital




