வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சியாட்டில் ஓர்காஸ் இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சியாட்டில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சூப்பர் கிங்சை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சியாட்டில் அபார வெற்றிபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/seattle-orcas-beats-texas-super-kings-in-major-league-cricket




