கவுகாத்தி, பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்த ரியான் (வயது 48 - பெயர் மாற்றப்பட்டுள்ளது) அசாம் மாநிலம் சிவசாஹர் பகுதியில் பானிப்பூரி கடை வைத்துள்ளார். சிவசாஹர் பகுதியில் ரியான் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வைத்தார். அந்த வீட்டிற்கு அருகே கூலித்தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த கூலித்தொழிலாளிக்கு 12 வயதில் மகள் உள்ளார். பாலியல் வன்கொடுமை இந்நிலையில், கூலித்தொழிலாளி தனது மனைவியுடன் தினமும் வேலைக்காக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ரியான் வீட்டில் தனியே இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தன்னை பானிபூரி வியாபாரி ரியான் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பானிபூரி வியாபாரி ரியானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பானிபூரி வியாபாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/panipuri-seller-form-bihar-raping-12-year-old-girl-in-assam




