செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பார்படோசை வீழ்த்தி நெவிஸ் பேட்ரியாட்ஸ் அபார வெற்றி பெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 23வது லீக் ஆட்டத்தின் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெவிஸ் பேட்ரியாட்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் குவிண்டன் டிகாக் அதிகபட்சமாக 106 ரன்கள் குவித்தார். நெவிஸ் பேட்ரியாட்ஸ் வெற்றி இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் வீரர் ஜான்சன் ஜார்லஸ் அதிகபட்சமாக 78 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-nevis-patriots-stun-barbados




