கோவை, கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். பெண் கொலை கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்கல் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவருக்கு ராஜா (35) என்ற மகனும், அமுதா (30) என்ற மகளும் உள்ளனர். அமுதா தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் வசித்து வருகிறார். ராஜா மட்டும் சாந்தியுடன் வசித்து வருகிறார். சாந்தி அங்குள்ள ஒரு டாக்டர் வீட்டில் சமையல் செய்து வந்தார். அவர், கடந்த 11-ந் தேதி இரவில் வீட்டில் தனியாக இருந்த போது அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கேமராக்களில் பதிவான காட்சி சாந்தியை கொலை செய்த நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், சாந்தி வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் ஒரு நபர் மட்டும் சாந்தி வீட்டிற்குள் சென்று திரும்பி வரும் காட்சி பதிவாகி இருந்தது. உடனே அந்த நபர் குறித்து விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதியில் சுற்றித்திரியும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. சிறுவன் கைது உடனே தனிப்படை போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த சிறுவன்தான் சாந்தியை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த 17 வயது சிறுவன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் சாந்தி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து உள்ளே சென்று செல்போனை திருடி உள்ளார். அதை சாந்தி பார்த்ததால் கட்டையால் அடித்துவிட்டு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச்சென்றார். அதில் அவர் உயிரிழந்து உள்ளார் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-arrested-for-beating-a-woman-to-death-while-she-was-alone-at-home




