சென்னை, ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.12,500 ‘ஆகாஷ் காஸ்டியூம்ஸ்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டு, தாய்லாந்தில் நடைபெற உள்ள ‘தர்மன்’ படப்பிடிப்பில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் நடிகர் அட்டை வழங்குவதற்காக ரூ.12,500 செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் ரூ.18 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறி மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து தேனாம்பேட்டை போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் சம்பந்தப்பட்ட புகைப்படத்தை யார் வெளியிட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அந்த பதிவை வெளியிட்ட நபரை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. எத்தனை பேர் ஏமாந்தனர்? இந்த முறையில் இதுவரை எத்தனை பேர் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகார் தொடர்பான விசாரணையின் முடிவிலேயே மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/fraud-involving-a-promised-role-in-the-movie-dharman-and-an-18-lakh-salary-police-complaint-filed




