மும்பை, "இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை யார் எழுதியது யார்?" என்று பிபா இறுதிப்போட்டியை கணவருடன் நேரில் பார்த்த பிரீத்தி ஜிந்தா நெகிழ்ச்சியுடன் பதிவுட்டுள்ளார். பிரீத்தி ஜிந்தா 2026 பிபா கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்த அனுபவத்தை நடிகை பிரீத்தி ஜிந்தா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நியூ ஜெர்சியில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான இறுதிப்போட்டியை தனது கணவர் ஜீன் குட்எனப்புடன் அவர் கண்டுகளித்தார். இறுதிப்போட்டி இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில், "இந்த வார இறுதி மிகவும் அற்புதமாக அமைந்தது. எனது கணவருடன் இணைந்து பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த முறை சாம்பியனான அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் மோதிய போட்டி மறக்க முடியாத அனுபவமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். யமாலை குளிப்பாட்டிய மெஸ்சி மேலும், "ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் லாமின் யமால் ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது, மெஸ்சியுடன் நடைபெற்ற ஒரு போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அப்போது குழந்தை யமாலை குளிப்பாட்டுவது போன்ற புகைப்படம் மெஸ்சியுடன் எடுக்கப்பட்டது. இன்று அதே யமாலும் மெஸ்சியும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஒருவருக்கு ஒருவர் எதிராக களமிறங்கியுள்ளனர். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை யார் எழுதியது யார்?" என்றும் பதிவிட்டுள்ளார். வாழ்த்துகள் தொடர்ந்து, "எனது கணவருடன் மைதானத்தில் இருந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 2026 பிபா உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/football/preity-zinta-reacts-to-spain-vs-argentina-fifa-world-cup-final-drama-who-writes-a-script-like-that




