சென்னை, அரசு மருத்துவமனைகளின் குறைகளை களைய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை முதல் தூத்துக்குடி வரை 31 மாவட்ட மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முதல்-அமைச்சர் அலுவலகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் தூய்மைப்பணி, குடிநீர், கழிப்பறை, நோயாளிகள் பராமரிப்பு, ஊழல், முறைகேடு, திருட்டு, நாய்கள் தொல்லை உள்ளிட்ட 304 குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசு மருத்துவமனைகளின் குறைகளை களையவும் 50 நோடல் அதிகாரிகளை தமிழக சுகாதாரத்துறை நியமித்துள்ளது. சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாய்கள், காவலர்கள் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாகவும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு முதல் பிணவறை வரை ரூ.2 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளை ஆய்வு செய்து சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-orders-action-to-resolve-shortcomings-in-government-hospitals




