சென்னை, காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த ஆட்சியில் திமுக எல்லா துறைகளிலும் ஊழல் செய்திருக்கிறது. கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் பணம் சென்றிருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும். காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதல்-அமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார். கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதல்-அமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. சத்தமாகச் சொல்லப்படுபவை அனைத்தும் உண்மையல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவர்… — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 7, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-meant-for-peoples-issues-has-turned-into-circus-tent-kanimozhi-criticism



