திருவனந்தபுரம், ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. அடுத்ததாக புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. திருவோணம் பண்டிகை மறுநாள் முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெற் றது. திருவோணம் பண்டிகையான 26-ந் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தா னம் சார்பில் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்பட்டது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விருந்தை உண்டு மகிழ்ந்தனர். இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதம் இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கான 4 நாள் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 10 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை முறைப்படி அடைக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/sabarimala-ayyappan-temple-closure




