சென்னை, பழனி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை இணைத்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒருவர் கைது இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷின் உதவியாளர், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவதூறு தகவல்களை பரப்பியது, 3 பேர் என்று தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் நேற்று இரவு வினோத் சூர்யகுமார் (வயது 33) என்பவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/person-arrested-for-spreading-defamatory-remarks-about-minister-ramesh-manhunt-on-for-two-others




