ஏக்தா கபூர் தயாரிப்பில் நடிகை தமன்னா நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான ‘தி விவான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் இரண்டு தசாப்தங்களாக முன்னணி கதாநாயகியாக தனது இடத்தை தக்கவைத்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமின்றி, இந்தி வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், சிறப்புப் பாடல்களிலும் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க அவர் சுமார் ரூ.6 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் 'புருஷன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேண்டஸி பாணியில் உருவாகியுள்ள ‘தி விவான்’ படத்தினை தீபக் குமார் மிஷ்ரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் குரோவர், மனீஷ் பால், ஸ்வேதா திவாரி, அனுப் சோனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நடிகை தமன்னா கடைசியாக ஓ ரோமியோ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஒடேலா 2 படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், ‘தி விவான்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கதையுடன் தொடர்புடைய பேண்டஸி படமாக இது உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலாஜி மோஷன் பிகசர்ஸ் உடன் முதல்முறையாக டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ் இணைகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/tamannaahs-the-vvaan-release-date-announced




