ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில், சூனியக்காரி என்ற சந்தேகத்தின் பேரில் 60 வயது மூதாட்டியை மரத்தில் மாடு போல் கட்டி வைத்து கிராம மக்கள் சிலர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெங்கட்டம்மா தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மஞ்சாலா மண்டலத்திற்குட்பட்ட நோமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் பல்லாட்டி வெங்கட்டம்மா (வயது 60). இவர் தனது கிராமத்தின் புறநகர் பகுதியில் சிறிய கோவில் ஒன்றை கட்டி, அங்கு வருபவர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். ஊருக்குள் பரவிய வதந்தி இந்த நிலையில், வெங்கட்டம்மா கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக மாந்திரீகம் செய்து வருவதாக கிராமத்தில் திடீரென வதந்தி பரவியது. இதனால் அவர் தங்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்து விடுவாரோ என்ற அச்சத்தில் அக்கம் பக்கத்தினர் ஆத்திரமடைந்தனர். வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் இதில் ஆவேசமடைந்த கிராம மக்கள் சிலர் திடீரென வெங்கட்டம்மாவின் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு அவரை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்தனர். பின்னர், அங்கே இருந்த மரத்தில் அவரை துணியால் பிணைத்து கட்டினர். தொடர்ந்து, அந்தக் கும்பல் வெங்கட்டம்மாவை கட்டைகளாலும் கைகளாலும் சரமாரியாக தாக்கியது. இதில் அவரது இடது கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தடுக்க வந்தவர்களுக்கும் அடி இதை பார்த்து பதறியடித்து கொண்டு ஓடிவந்த அவரது கணவர் போச்சையா மற்றும் மகன் மகேஷ் ஆகியோர் தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், ஆத்திரமடைந்த கும்பல் அவர்களையும் விட்டுவைக்காமல் சரமாரியாக அடித்து உதைத்து தர்மஅடி கொடுத்து விட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த வெங்கட்டம்மாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மஞ்சாலா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 14 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/villagers-tie-and-assault-elderly-woman-accused-of-witchcraft




