நாட்டில் நடைபெறும் அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 சரணங்கள் மட்டுமே பாடுவோம் என்று கூறிவிட்டது. மேலும் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத் தில் நடந்த சுதந்திர தின விழாவின் போது, வந்தே மாதரம் பாடல் பாடப் பட்டது. அந்த பாடலை முழுமையாக பாடாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக எழுந்தது. கர்நாடக அரசு உத்தரவு இந்த நிலையில் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசு, அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 சரணங்கள் மட்டும் பாடினால் போதும் என்று உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பொருந்தாது. அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடலாம் என்றும், மற்ற அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் 2 சரணங்கள் பாடினால் போதும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப இந்த உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித் துள்ளது. இதற்கு பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/only-two-stanzas-of-vande-mataram-to-be-sung-karnataka-government-issues-strict-order




