சமூக வலைத்தள பயனர்கள் இடையே வாட்ஸ் அப் தற்போது தவிர்க்க முடியாத செயலியாக மாறிவிட்டது. நண்பர்களுடன் அரட்டை அடிப்பது மட்டுமின்றி பல முக்கியமான கோப்புகள், இமேஜ்கள் உள்ளிட்டவற்றை பகிரும் தளமாகவும் வாட்ஸ் அப் மாறிவிட்டது. தொழில் சார்ந்த உரையாடல்கள், குடும்பச் செய்திகள், வேலை தொடர்பான உரையாடல்கள், பள்ளி குழுக்கள், வாடிக்கையாளர் மெசேஜ்கள் என பல்வேறு காரணங்களுக்காகவும் பலருடன் தினமும் வாட்ஸ் அப்பிலேயே பலரும் உரையாடுகிறார்கள். இந்தியாவில் மட்டும் உள்ள வாட்ஸ் அப் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடிக்கும் மேல் உள்ளது. பயனர்களை கவரவும் சந்தையில் போட்டியை சமாளிக்கவும் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட பிறகும் அதன் கேப்ஷனை 15 நிமிடங்களுக்குள் திருத்தும் புதிய வசதியை, அந்நிறுவனம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்து வருகிறது. இதனால், ஸ்டேட்டஸை நீக்கி மீண்டும் பதிவேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/new-feature-coming-to-whatsapp-good-news-for-frequent-status-posters




