திருமணத்தை நடத்திக்கொண்டுத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்த சூர்யா - ஜோதிகா, அதன் பிறகு 'பேரழகன்', 'காக்க காக்க', 'மாயாவி' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 2006-ம் ஆண்டு 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் இணைந்து நடித்த அவர்கள், அப்படம் வெளியான 3-வது நாளில் செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். 20 ஆண்டுகள் நிறைவு பல தம்பதிகளின் ஆதர்ச ஜோடிகளாக இருக்கும் சூர்யா - ஜோதிகாவுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திரைத்துறையினரின் திருமணம் என்றாலே நீண்ட காலம் நிலைக்காது என்ற பார்வையே நீடித்துவரும் சூழலில், சூர்யா - ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். மீண்டும் திருமணம் இந்த தம்பதி கடந்த 11-ம் தேதி தங்களது 20-வது திருமண நாளைக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக இருவரும் மகள், மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோவை ‘தி சீக்குவல்’ என்று குறிப்பிட்டு சூர்யா - ஜோதிகா தம்பதி பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அனைவருக்கும் நன்றி இந்த நிலையில், திருமணத்தை நடத்திக்கொண்டுத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சூர்யா- ஜோதிகா இணைந்து அவர்களின் திருமண வாழ்க்கை பற்றி பேசுவது திருமண நிகழ்வின் பின்னணியில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், “பனிமூட்டமான மலைப்பகுதிகளும் ஏரிகளும் காதல் கொள்ளும் ஸ்காட்லாந்து, எங்களின் காதலையும் பிரதிபலிக்கும் விதமாக இருந்ததால் நாங்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் வீடு திரும்புகையில் நினைவுகளை விட மேலான ஒன்றை நாங்கள் சுமந்து சென்றோம். பரந்த மனதுள்ள, உண்மையான அன்பைக் காட்டும் மனிதர்களை சந்தித்ததால் எங்கள் இதயங்கள் ஸ்காட்லாந்து விட்டு எப்போதும் பிரியாது என குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/surya-jyothika-wedding-anniversary-celebration-video-released-expressing-gratitude




