சென்னை, சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டது மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:- பட்டமளிப்பு விழா இன்றைய தினம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-ஆவது பட்டமளிப்பு விழாவில், மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சிதாராமன் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தேன். பாராட்டுகள் இந்நிறுவனத்தின் தலைவரும், புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம், தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டு, எளிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கி வருவதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பு தங்களது கல்வி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டி, பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இன்று அவர்கள் பெற்றுள்ள இந்த பட்டம், தங்களது அறிவையும் திறமையையும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் அர்ப்பணிக்கும் புதிய பொறுப்பிற்கான தொடக்கமாக அமையட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-ஆவது பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி. அவர்களுடன் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெரும்… — Nainar Nagenthran (@NainarBJP) September 15, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mgr-university-convocation-nirmala-sitharaman




