கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். உடல் எடை இழப்புக்கும் பக்கபலமாக அமையும். மேலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்தும். பசி உணர்வு இன்றி வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள முடியும். முதிர்ச்சி அடைவதை தடுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் உணவுகளை சாப்பிடுவது செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கும். இதன் மூலம் வயதான தோற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தவிர்க்கப்படும். மேலும் நாள்பட்ட நோய்களை தடுக்கவும் உதவும். வழக்கமான சர்க்கரைவள்ளிக்கிழங்குடன் ஒப்பிடும்போது ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆன்டி ஆக்சிடென்ட் நன்மைகளை அதிகம் கொண்டிருக்கும். சருமப் பொலிவு சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது. ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் சருமப் பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின் டி அவசியமானதாகிறது. எலும்பு தேய்மானத்தை குறைக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்களாகும். ஆட்டோ இம்யூன் உள்ளிட்ட கொடிய நோய்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு இந்த இரண்டு வைட்டமின்களும் உள்ளடங்கி இருக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அபாயத்தை குறைக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது. இவை ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன. எலும்பு தேய்மானம் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன. நீரிழிவு நோய் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பது தவறான கருத்தாகும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. இது கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலிருக்கும் ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/from-skin-glow-to-heart-health-the-benefits-of-sugar-beets




