இடுக்கி கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதில் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலதாமதத்துடன் தொடங்கியது. எனினும், சமீப நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இடுக்கியில் நிலச்சரிவு இதில் இடுக்கி மாவட்டத்தின் அடூர் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல் அறிந்து அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழு இடுக்கிக்கு சென்றுள்ளது. பலத்த மழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்களுக்கு எச்சரிக்கை அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாவாசிகள் யாரும் ஆபத்து நிறைந்த மலை பகுதிகளுக்கோ அல்லது கடலோர பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/kerala-5-districts-red-alert-landslide-in-idukki




