சென்னை, சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சேவல் சண்டை தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் சுற்றறிக்கை பிறப்பித்தார். இந்த நிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அனுமதி வழங்க வேண்டும் அந்த மனுவில், "கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். போலீசார் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். என்ன அதிகாரம்? இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், "மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்" என்று கேட்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பி, மனுவுக்கு பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-authority-does-dgp-have-to-ban-cockfights-high-court-asks




