சென்னை, தமிழகமே இருளில் மூழ்கிய பின்புதான் மின்வெட்டுக்கான காரணத்தையே அமைச்சர் கண்டறிந்திருக்கிறாரா? என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி்.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். ஊழியர்கள் எழுப்பும் குரல் இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- ரீல்ஸ் வீடியோவுக்காக மக்களைப் பார்த்துக் கை அசைத்த முதல்-அமைச்சர், மின்வாரிய அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை சந்திக்காமல் சென்றது ஏன்? தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்பாக, மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, அதே மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் அருகே, காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குமாறும் போராடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எழுப்பும் குரல் கேட்கவில்லையா? அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் அளவிற்கு மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அடிப்படைப் பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தாமல், "நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்" என ரீல்ஸ் வீடியோக்களுக்காக மட்டுமே முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தனது மனம் போன போக்கில் சம்பிரதாயத்திற்கென ஆட்சியை நடத்தி வருவதாக அரசு ஊழியர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக, காற்று நின்றுவிட்டது, தண்ணீர் வற்றிவிட்டது, சோலார் மின்சாரத்தைச் சேமிக்க இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் அளவிற்கு எரிசக்தித் துறை அமைச்சரும் சக அமைச்சர்களும் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்து வந்த நிலையில், பணியாளர்களின் பற்றாக்குறையும், பராமரிப்புப் பணிகள் நடைபெறாததும் தான் மின்வெட்டுக்கான காரணம் என்ற புதுக் கதையை எரிசக்தித் துறை அமைச்சர் இன்று வடிவமைத்துள்ளார். சர்ச்சைக் கருத்துகள் மின்சாரத் துறைக்கு பொறுப்பு வகித்துக்கொண்டு, அந்த துறையை தவிர்த்து மற்ற அனைத்து பிரச்னைகளிலும் மூக்கை நுழைப்பதையும், அரைகுறை அறிவோடு "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்" போல் சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் எரிசக்தித்துறை அமைச்சர், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, தமிழகமே இருளில் மூழ்கிய பின்புதான் மின்வெட்டுக்கான காரணத்தையே கண்டறிந்திருக்கிறாரா? தடையற்ற மின்சாரம் எனவே, இனியும் புதுப்புது கதைகளைச் சொல்லியும், தங்களது நிர்வாகத் திறமையின்மையை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் மீது பழிபோட்டு மக்களை திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, மின்வெட்டுக்கான உண்மையான காரணங்களை அறிந்து, அதனை நிவர்த்தி செய்து, தடையற்ற மின்சாரம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என மின்சார வாரியத்தையும் த.வெ.க. அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/does-the-chief-minister-who-waves-for-reels-not-hear-the-voices-of-protesting-employees-ttv-dhinakaran-asks




