சென்னை, அடிப்படை வசதிகள் கோரி பெரம்பூரில் உள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். பெரம்பூர் தொகுதி பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக முதல்-அமைச்சர் விஜய் உள்ளார். பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு 'மக்கள் சேவை தளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் இந்த பிரத்யேக செல்போன் செயலியை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை எம்.எல்.ஏ. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் செல்வதை சரி செய்ய வலியுறுத்தி 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் சாலையிலே கழிவுநீர் செல்வதாகவும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் நீதிமன்ற வழக்கின் காரணமாக அப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இதனிடையே, தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்து தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இதுதொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த தவெக நிர்வாகிகளுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதனையடுத்து மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக நிர்வாகிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-mla-office-in-perambur-besieged




