திருநெல்வேலி, தமிழக - கேரள மாநில எல்லைப்பகுதியில், தென்மலை அருகே உள்ள அம்பநாடு எஸ்டேட் பகுதியில், பிரசவ வலியால் துடித்த பெண் யானை ஒன்றுக்கு அழகிய குட்டி பிறந்தது. குட்டி பிறந்த அடுத்த கணமே, அதை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்தும், மனித நடமாட்டத்திலிருந்தும் பாதுகாக்க, கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் அனைத்தும் ஒன்று திரண்டன. நடுவழியில் பிரசவ வலி தென்மலை அருகே உள்ள அம்பநாடு தேயிலை தோட்டம் வழியாக ஒரு காட்டு யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு கர்ப்பிணி யானைக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.வலி தாங்க முடியாமல் தவித்த அந்த யானை, ஒரு அழகான குட்டியை ஈன்றெடுத்தது. உடனடி பாதுகாப்பு குட்டி பிறந்து கீழே விழுந்த அடுத்த நொடியே, கூட்டத்தில் இருந்த பெரிய யானைகள் அலறியபடி தாய் யானையை நோக்கி ஓடி வந்தன. குட்டியையும், பலவீனமாக இருந்த தாய் யானையையும் நடுவில் நிறுத்திக்கொண்டு, மற்ற யானைகள் அனைத்தும் வெளிப்பக்கமாக நின்றுகொண்டன. ஆக்ரோஷ எச்சரிக்கை எஸ்டேட் தொழிலாளர்களோ அல்லது வனத்துறையினரோ தவறிக்கூட அருகில் நெருங்கி விடக் கூடாது என்பதால், தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியபடி ஆக்ரோஷமாக எச்சரிக்கை விடுத்தன. பிறந்த குட்டி யானை உடனடியாக எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடியது. அது தட்டுத்தடுமாறி எழுந்து, தாயிடம் பால் குடித்து, சொந்தக் காலில் நடக்க தொடங்கும் வரை சுமார் பல மணி நேரம் சக யானைகள் அந்த இடத்தை விட்டு ஒரு அடியும் நகரவில்லை. பாதுகாப்பான பயணம் குட்டி ஓரளவுக்கு நடை பழகியதை உறுதி செய்த பின்னரே, அரணாக நின்ற யானைகள் மெதுவாக அதை தங்களின் நடுவே கூட்டி கொண்டு அடர்ந்த காட்டு பகுதிக்குள் நிதானமாக நடந்து சென்றன.ரப்பர் எஸ்டேட் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் யானைகள் முகாமிடுவதால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அச்சு றுத்தல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், குட்டி யானையுடன் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது எஸ்டேட் மீண்டும் நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-elephant-born-in-ambanadu-estate-near-thenmalai




