உடுமலை, அமராவதி அணை உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு, கேர ளம் மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, பாம் பாறு, தேனாறு உள்ளிட்ட பிரதான ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் மூலம் மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. இதனை ஆதாரமாக கொண்டு திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக் கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இந்த நிலையில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால், அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் சென்றது. இருந்தபோதிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த சாரல் மழையால், கடந்த மாதம் 2-வது வாரத்தில் நீர் மட்டம் 50 அடியை கடந்தது. இதையடுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கடந்த மாதம் 21-ந் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் அமராவதி ஆற்றில் உள்ள 8 பழைய ராஜ வாய்க்கால்கள் வழியாக 135 நாட்களுக்கும், புதிய ஆயக்கட்டு பாசனத் திற்கு பிரதான கால்வாய் மூலம் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு 15 நாட்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நீர் திறப்பின்போது 51.44 அடியாக இருந்த அணையின் நீர் மட் டம், கடந்த 29-ந் தேதி 28.54 அடியாக சரிந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. 4 நாட்களில் 6 அடி உயர்வு இதன் காரணமாக வினாடிக்கு 900 கன அடி வரை நீர் வரத்து ஏற்பட்டுள் ளது. இதனால் கடந்த 29-ந் தேதி 28 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம், நேற்று காலை நிலவரப்படி 34.48 அடியாக உயர்ந்தது. கடந்த 4 நாட்களில் 6 அடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயி கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யில் மழைப்பொழிவு தொடர வேண்டும், அணையின் நீர் மட்டம் உயர வேண்டும், மகசூல் பெருக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப் பாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-to-amaravathi-dam




