கடந்த ஜூலை 8ம் தேதி நடிகை சுவாதிக்கும், இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோடிக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது. தமிழில் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற 'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்' பாடலில் சுவாதி நடிப்பு பேசப்பட்டது. போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு ‘மந்த் ஆப் மது’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோத்தியுடன் திருமணம் கடந்த ஜூலை 8ம் தேதி நடிகை சுவாதிக்கும், இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோடிக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த்தும், சுவாதியும் இன்ஸ்டாகிராமில் திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கூட்டாக பகிர்ந்து, ‘திருமணம் முடிந்தது. 08-07-2026’ என்று பதிவிட்டிருந்தனர். மிக எளிய முறையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இரண்டாவது திருமணம் நடிகை சுவாதிக்கு இது இரண்டாவது திருமணமாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த விமானி விகாஸ் வாசு என்பவரை சுவாதி திருமணம் செய்தார். 2023ஆம் ஆண்டு விகாஸ் வாசுவிடம் இருந்து விவாகரத்து பெற்றார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/subramaniapuram-actress-swathi-marries-director-sreekanth




