திருநள்ளாறு, கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா அருகே மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில மக்களின் குடிநீர் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் முன்மொழியப்பட்டதாக கர்நாடக அரசு கூறி வருகிறது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 4.75 டி.எம்.சி. குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன், இத்திட்டத்தின் மூலம் 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கர்நாடக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா வந்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது:- நிரந்தரத் தீர்வு தமிழக முதலமைச்சர் விஜயை முன்னாள் பிரதமர் தேவகவுடா பாராட்டி பேசியுள்ளார். மக்கள் விரும்பும் தலைவராக விஜய் இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் பேராதரவை பெற்றுள்ளார். கர்நாடகாவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு நிலவும் தண்ணீர் பிரச்சினையை தமிழக தலைவர்கள் உணர்ந்துள்ளனர். காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் நீண்டு கொண்டே தான் செல்லும், இதன் மூலம் நிரந்தரத் தீர்வு எட்டப்படாது. காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநிலமும் சுமூகமாக பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/both-states-should-resolve-the-cauvery-issue-through-dialogue-deve-gowda-insists




