நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் நாடாளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, "காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, தமிழ்நாட்டைக் கடந்து செல்லும் ஏனைய பிற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைக் கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரிM Sand, ஜல்லி: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை - 9 காரணங்கள்! 16.02.2018 நாளிட்ட தனது உத்தரவில், 2007-ஆம் ஆண்டின் காவிரி நீர் நடுவர் மன்றத் தீர்ப்பின் (CWDT Award) XVIII-வது பிரிவை உகந்ததாக ஏற்றுக் கொண்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றம், "இந்த நடுவர் மன்றத்தின் உத்தரவில் உள்ள எதுவும், எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கோ அல்லது இந்நடுவர் மன்றத்தின் உத்தரவிற்கு முரண்படாத வகையில் அம்மாநிலத்திற்குள் கிடைக்கும் நீரின் பயனை அடைவதற்கோ உள்ள உரிமை, அதிகாரம் அல்லது அதிகார வரம்பைப் பாதிக்காது" என்பதைத் தனது உத்தரவில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து We The Leaders தலைவர் அண்ணாமலை பதிவு: "கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அண்ணாமலைமாண்டெக் சிங் தலைமையில் தமிழ்நாடு வருவாயை உயர்த்த உயர்மட்ட குழு! யார் இவர், உறுப்பினர்கள் யார் யார்? கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா? தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்". கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று… — K.Annamalai (@annamalai_k) July 28, 2026 காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு "தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை" என பாராளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் அளித்திருக்கும் எழுத்துப்பூர்வமான பதில் மிகவும் ஆபத்தானது; முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது! தமிழ்நாட்டிற்கும் நமது விவசாயிகளுக்கும்… — Manickam Tagore.Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) July 27, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/cauvery-row-annamalai-oppose-centres-reply-on-karnataka-dam




