திருக்கடவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அன்னை அபிராமியும் அப்பன் அமிர்தகடேஸ்வரரும்தான். அதே தலத்தில் அருளும் விநாயகப்பெருமான் மிகவும் முக்கியமானவர். அவரைத்தான் முதலில் வணங்க வேண்டும். மேலும் அவரை வணங்கினால் வாழ்வில் மகிழ்ச்சி அமிர்ந்தம்போல் பொங்கும் என்பார்கள். வாருங்கள் அவரின் அற்புதங்களை அறிந்துகொள்வோம். பாற்கடல். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும், திருமாலாம் ஆமையை அச்சாகவும் அமைத்துக் கடைந்தனர். மேரு மலை நிலைதடுமாறாதபடி திருமாலே கூர்மமாக - ஆமையாக அவதரித்து வந்து தாங்கிக்கொண்டிருந்தார். கள்ளவாரணப்பிள்ளையார் எதிர்பாராவிதமாக கடலில் இருந்து ஆலகால விஷம் எழுந்தது. அனைவரும் அஞ்சி ஓடினர். சிவனார் தானே அந்த விஷத்தை உண்டு அவர்களைக் காத்தார். மறுபடியும் பாற்கடலைக் கடைந்தனர் தேவர்களும் அசுரர்களும். நீண்டநேர முயற்சிக்குப் பிறகு அமுதம் வந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். அதை உண்பதற்கு முன், அமுதத்தை ஒரு கடத்தில் (குடத்தில்) அடைத்து, தவசித்தபுரம் எனும் வில்வ வனத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு நீராடச் சென்றனர். சிறிது நேரத்துக்குப் பிறகு திரும்பி வந்தவர்கள், கடத்தை எடுக்க முயன்றனர். ஆனால், அது பாதாளம் வரை வேர்விட்டு ஊடுருவி, சுயம்பு மூர்த்தியாக, சிவலிங்க வடிவில் அங்கேயே நிலைபெற்றது. கடத்தில் உள்ள அமுதமே லிங்க வடிவமாக உருக்கொண்டதால் அந்த மூர்த்தி அமிர்தகடேசர், அமுதகடேசர் என்றெல்லாம் திருநாமங்கள் பெற்றார். அந்தத் தலத்தின் பெயரும் கடவூர் (கடம் இருந்த ஊர்) என்றாயிற்று. மேலும், காலனை (யமனை) கடந்த தலமாதலால் கடவூர் என்று கூறலாம். இந்த அமுத லிங்கத்தை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலானோர் பூஜித்து வேண்டினர். அவர்களது வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், ‘`நீங்கள் அமுதத்தைப் பெற கணபதியிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்; நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்!’’ என்று அறிவுறுத்தினார். அதன்படியே தேவர்கள் அனைவரும் முழுமுதற்தெய்வமாம் பிள்ளையாரை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். விநாயகரும் திருக்காட்சி தந்தார். காலசம்ஹாரமூர்த்தி ஒரு காரியம் எவ்வித சிக்கலும் சங்கடமும் இல்லாமல் நிறைவேற வேண்டுமானால், கணபதியை முதலில் தொழுதுவிட்டு அந்தக் காரியத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் தேவர்களோ அமிர்தம் பெறுவதற்காக தாங்கள் மேற்கொண்ட காரியத்துக்குமுன் பிள்ளை யாரை வணங்க மறந்தார்கள். அதன் விளைவாகவே அமிர்தத்தைக் காணாமல் திண்டாடினார்கள். இந்த விஷயத்தை பிள்ளையார் அவர்களுக்குத் தெளிவு படுத்தினார். ‘`எம்மை மறந்ததால் யாம் மறைத்தோம்; எனவே, தந்தையார் சிவபிரான் அருளிய அமுதம் கிடைத்தும் கிடைக்காதவர்கள் ஆயினீர்; கவலையை விடுங்கள். நீங்கள் விரும்பிய அந்த அமுதம் மீண்டும் அமிர்த தீர்த்தத்தில் தோன்றும். அருந்தி மகிழுங்கள்!’’ என்று அருள்பாலித்தார். தேவர்கள் மகிழ்ந்து, ‘`பெருமானே. தாங்கள் கள்ள விநாயகர் என்ற திருநாமத்துடன் இவ்விடத்திலேயே எழுந்தருளி, அன்பர்கள் வேண்டியதைத் தந்தருள வேண்டும். தாங்கள் அருளிய அமுதத்தை தங்கள் திருமுன் வைத்து அருந்த விரும்புகிறோம்’’ என்று வேண்டினர். பிள்ளையாரும் ``அப்படியே ஆகட்டும்’’ என்று அருள் புரிந்தார். பிறகு, ஞானவாவியின் மேல்புறம் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து துதித்துப் போற்றினர். கணபதியின் திருவருளால் அமுதத்தை உண்டு மகிழ்ந்தனர். இன்றைக்கும் இந்தத் தலத்துக்குத் தன்னைத் தேடிவந்து வணங்கும் பக்தர்களின் உள்ளங்களைக் கவரும் கள்வனாக, அவர்கள் வேண்டும் வரங்களை அருளும் வள்ளலாக அருள்பாலிக்கிறார், இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார். அமிர்தம் கடைதல் மார்க்கண்டேயனின் சிவபக்திக்காக எமனைக் கடிந்த தலமான திருக்கடவூரில் காலசம்ஹார மூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷம். ஈசன், மார்க்கண்டேயருக்காக காலனை தண்டித்த தலம் இது. ஆக, இறைவன் இங்கே கால சம்ஹாரராக தனிச்சந்நிதியில் அருள்கிறார். ‘மிருத்யு’ எனும் மரணத்தை வெல்பவர் அவர். எனவே, அவரை ‘மிருத்யுஞ்ஜயர்’ என்றும் போற்றுவர். உயிர்களை அழிக்கும் யமனுக்கும் காலனாகத் திகழ்பவர் சிவபெருமான். அதனால் அவரை காலாந்தகர், காலாரி, கால காலர், காலசம்ஹாரர், கால கண்டன் என்ற பல பெயர்களால் அழைப்பர். அம்மை அபிராமியும் நம் வினைகளைக் களைந்து மரணத்துக்கு ஒப்பான கண்டங்களையும் அகற்றி சந்தோஷ வாழ்வு தரும் தாயாகத் திகழ்கிறாள். அபிராமியம்மையின் சந்நிதி தனிக் கோயிலாகக் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அமிர்தகடேசர் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் வெளி மண்டபத்தில், இடதுபுறம் கிழக்கு நோக்கிகள்ள வாரணப் பிள்ளையார் காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்துக்கு வந்து இந்த கள்ளவாரணப் பிள்ளையாருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து வழிபட, ஆனந்த வாழ்வு கிட்டும். வாழ்க்கை நலமாகும். வளமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/spiritual/temples/thirukadaiyur-kalla-varana-pillaiyar-special




