கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அதே கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகிகள் கேட்டதன்பேரில் தகவல் கொடுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக மாணவனின் தந்தை கென்னடி ஊடகங்களில் பேசியுள்ளார். இதே கருத்தை அவருடைய உறவினரும் பிபிசியிடம் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cdewp200je8o



