திருச்சி, கோவில் நிலத்தில் கைவைத்தவர்களை விடமாட்டோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- “கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆட்சிக்கு வந்து 40 நாட்கள்தான் ஆகின்றன. முதலில் இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, எங்கெங்கு ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். இதை எல்லாம் திரைப்படத்தில் வருவது போல் ஒரே நாளில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காத காரியம். ஆனால் கோவில் நிலத்தில் கைவைத்தவர்களை நிச்சயம் விட மாட்டேன். கோவிலுக்கான நிலங்களை யார் ஆக்கிரமித்து வைத்திருந்தாலும், அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு யார் துணையாக இருந்தாலும், யார் ஆதரவாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்போம் என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-spare-those-who-lay-a-hand-on-temple-lands-minister-ramesh-warns




