லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஜேக்கப் பெத்தேல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 43 ரன்களில் வெளியேறினார். பின்னர் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஹாரி புரூக் 1 ரன், ஜோஷ் பட்லர் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சாம் கரன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜோ ரூட், டாசன் இருவரும் இணைந்து நிலைத்து விளையாடினர். சிறப்பாக விளையாடி ஜோ ரூட், டாசன் அரைசதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அக்சர் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/இந்திய-அணிக்கு-259-ரன்கள்-இலக்கு-நிர்ணயித்த-இங்கிலாந்து




