மும்பை, “சமீபகாலமாக நான் எந்த விஷயத்திலும் கருத்து சொல்வதை நிறுத்திவிட்டேன். சில நேரங்களில் அமைதியாக இருப்பதும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், நான் செல்ல வேண்டிய பாதையில் தெளிவாக இருக்கிறேன். ”என்று நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பேசியுள்ளார். சர்ச்சைக்கு பிறகு மீண்டும் திரையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருடன் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இருந்த தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது, சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கியதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பான பரபரப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய சில கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. “என் போக்கில் வாழும் வாழ்க்கை இது” நிகழ்ச்சியில் பேசிய ஜாக்குலின் பெர்னாண்டஸ், சமீபகாலமாக எந்த விஷயத்திலும் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருவதாக கூறினார். “சமீபகாலமாக நான் எந்த விஷயத்திலும் கருத்து சொல்வதை நிறுத்திவிட்டேன். சில நேரங்களில் அமைதியாக இருப்பதும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், நான் செல்ல வேண்டிய பாதையில் தெளிவாக இருக்கிறேன். யாருக்கும் உதவவோ, ஆறுதல் கூறவோ நான் வரவில்லை. இது என் வாழ்க்கை. என் போக்கில் வாழும் வாழ்க்கை. எனக்காக மட்டுமே வாழ்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸின் இந்த வெளிப்படையான பேச்சு, அவரது தற்போதைய மனநிலையை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/even-silence-becomes-heavy-at-times-jacqueline-fernandez




